உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஒப்பந்த சுகாதார தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஏ.ஐ.டி.யு.சி. சங்க மாநாட்டில் தீர்மானம்

Published On 2021-12-21 07:23 GMT   |   Update On 2021-12-21 07:23 GMT
மாநாட்டில் தலைவராக ரவி, பொதுச்செயலாளராக நடராஜன், பொருளாளராக ஜெகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சுகாதார தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் சேகர் வாழ்த்தி பேசினர். சுகாதார தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜெகநாதன் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தார்.

இதில் தலைவராக ரவி, பொதுச்செயலாளராக நடராஜன், பொருளாளராக ஜெகநாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து பெறவேண்டும்.

தேவையான ஆட்களை நியமித்து, மக்கும் குப்பைகளை உரமாக்க வேண்டும். அதற்கு தேவையான கருவிகளை வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைத்து சுகாதார தொழிலாளருக்கும் வீடு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

பல்லடம் ரோடு, அம்பேத்கர் நகர், சந்தைப்பேட்டை, தாராபுரம் ரோடு காலனி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவோருக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News