உள்ளூர் செய்திகள்
மரணம்

திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து விழுந்து சமூக சேவகர் பலி

Published On 2021-12-20 14:55 IST   |   Update On 2021-12-20 14:55:00 IST
திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சமூக சேவகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொன்னேரி:

பொன்னேரி அடுத்த டி.வி.புரம் ராஜீவ் காந்தி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது45). சமூக சேவகர். இவர் பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் உள்ள பழமை வாய்ந்த திருப்பாலீஸ்வரர் கோவில் கோபுரத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ரமேஷ் கால் தவறி கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ரமேசுக்கு, கிரிஜா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Similar News