உள்ளூர் செய்திகள்
விழாவில் கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் பேசிய காட்சி.

தடையில்லா மின்சாரம் வழங்க தீவிர நடவடிக்கை - கோவை மண்டல தலைமை பொறியாளர் பேச்சு

Published On 2021-12-18 14:58 IST   |   Update On 2021-12-18 14:58:00 IST
தற்போது மின் பழுது ஏற்பட்டால் துரிதமாக பழுது நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சிக்கன வார விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் தலைமை வகித்தார்.

கல்லூரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தின் செயற்பொறியாளர் (பொது) சர்மிளா வரவேற்றார் .

விழாவில் மின் சிக்கனம் குறித்து கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வழங்கி பேசினார்.  

விழாவில் மின் கோட்ட பொறியாளர்கள் கோபால் (பல்லடம்), கணேஷ் (காங்கேயம்), பல்லடம் உதவி செயற்பொறியாளர்கள் கருணாம்பிகை, பன்னீர்செல்வம், கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார், தலைமை நிர்வாக அலுவலர் பேராசிரியர் அன்பரசு, கல்லூரி மின்னியல் துறை உதவி பேராசிரியர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர் .

விழாவிற்கு பின்னர் கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் நிருபர்களிடம் கூறியதாவது :

கோவை மின் மண்டலத்தில் தடையில்லா மின் விநியோகம் வழங்கிட முன் ஏற்பாடாக மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரிப்பு பணி செய்து வருகிறோம். இதன் மூலம் மின் விநியோகம் சீராக வழங்கிட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தற்போது மின் பழுது ஏற்பட்டால் துரிதமாக பழுது நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அலைபேசி புகார் எண் செயல்பாட்டை மின் நுகர்வோர் வரவேற்றுள்ளனர். தேவைப்படும் இடங்களில் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

அத்துடன் அப்பநாயக்கன்பட்டி, கல்லப்பாளையம் (சுல்தான்பேட்டை ஒன்றியம்), மடவிளாகம், பூவாண்டம்வலசு, கம்பிளியாம்பட்டி (காங்கேயம்) ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News