உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வெண்பட்டுக்கூடுகள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-12-17 07:55 GMT   |   Update On 2021-12-17 07:55 GMT
உடுமலை மைவாடி அரசு கொள்முதல் மையத்தில் வெண்பட்டுக்கூடுகள் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.640 வரை விலை கிடைத்தது.
உடுமலை:

தமிழகத்திலேயே பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை முன்னிலை வகிக்கிறது. இதற்கான சூழல் இங்கு நிலவுகிறது. 

உடுமலை சுற்றுப்பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் பட்டு வளர்ச்சித்துறையின் கொள்முதல் மையத்திலும், கர்நாடகா ராம்நகர் கொள்முதல் மையத்துக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இந்நிலையில் தொடர் மழையால் வரத்து பாதிக்கப்பட்டு தேவை அதிகரித்துள்ளதால் வெண்பட்டுக்கூடுகளின் விலை அரசு கொள்முதல் மையங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது.

உடுமலை மைவாடி அரசு கொள்முதல் மையத்தில் வெண்பட்டுக்கூடுகள்  கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.640 வரை விலை கிடைத்தது. தர்மபுரி உட்பட கொள்முதல் மையங்களில் விலை கிலோரூ. 700-ஐ தாண்டியுள்ளது.
Tags:    

Similar News