உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

எலக்ட்ரானிக் கழிவுப்பொருட்களை ஒப்படைக்க பொதுமக்களுக்கு அழைப்பு

Published On 2021-12-17 07:47 GMT   |   Update On 2021-12-17 08:21 GMT
விருப்பம் இருந்தால் அதற்கான தொகையும் பெற்று கொள்ளலாம் என ‘துப்புரவாளன்’ அமைப்பினர் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் பகுதியினர் தங்களிடமுள்ள எலக்ட்ரானிக் கழிவுகளை ஒப்படைக்க  விரும்பினால் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியுடன் இணைந்து ‘துப்புரவாளன்’ என்ற தன்னார்வ அமைப்பு பொதுமக்களிடமிருந்து வீடுகளில் பயன்படுத்தாமலும், அப்புறப்படுத்த வழியில்லாமலும் தேங்கிக் கிடக்கும் எலக்ட்ரானிக் கழிவுகளை பெற்று அவற்றை முறையாக அழிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒரு வாய்ப்பு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் வருகிற 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் எலக்ட்ரானிக் கழிவுகளை பெற்று கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் ‘டி.வி.’, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், சார்ஜர், லேப்டாப், கம்ப்யூட்டர், ஹெட்போன் போன்ற பயன்படுத்தாமல் உள்ள பொருட்களை பொதுமக்கள் கொண்டு வந்து ஒப்படைக்கலாம். 

விருப்பம் இருந்தால் அதற்கான தொகையும் பெற்று கொள்ளலாம் என ‘துப்புரவாளன்’ அமைப்பினர் தெரிவித்தனர். 
Tags:    

Similar News