உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூர் மாணவர் தேர்வு

Published On 2021-12-16 13:05 IST   |   Update On 2021-12-16 13:05:00 IST
10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
திருப்பூர்:

பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய ஒருமைப்பாடு முகாம் கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்  தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் முகாமில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட  10க்கும்  மேற்பட்ட மாநிலங்களில் இருந்து  நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் இருந்து 10 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிக்கண்ணா அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 மாணவர் அருள்குமார்  தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்காக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வேதியியல் துறைத்தலைவர் ராஜகோபால் மற்றும் பேராசிரியர்கள் ராஜாசிங், சம்பத்குமார், ஹரேஷ்பாண்டியா, விநாயகமூர்த்தி மற்றும் மாணவர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

Similar News