உள்ளூர் செய்திகள்
கேரம் போட்டி நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் கேரம் போட்டி

Published On 2021-12-12 14:14 IST   |   Update On 2021-12-12 14:14:00 IST
பள்ளி மாணவ, மாணவிகள் பலர் போட்டியில் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடினர்.
திருப்பூர்:

திருப்பூர்  மாவட்ட கேரம் சங்கம்  சார்பில் திருப்பூர் மாவட்ட அளவிலான  கேரம் சாம்பியன்ஷிப்-2021 போட்டி நடைபெற்றது. திருப்பூர் தென்னம்பாளையம் காலனி ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கேரம்  சங்க மதிப்புறு தலைவர் பொன்னுசாமி  தலைமை தாங்கினார். 

மதிவாணன், சங்கத்தின் மேற்கு மண்டல செயலாளர் தங்ககுமார், துணை செயலாளர் கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர் வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் பலர் போட்டியில் பங்கேற்று ஆர்வமுடன் விளையாடினர். 

Similar News