உள்ளூர் செய்திகள்
திருப்பூர் பல்லடம் ரோடு ஆர்.வி.ஆர். லேஅவுட் பகுதியில் தடுப்பூசிமுகாம் நடைபெற்ற காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-12-12 14:09 IST   |   Update On 2021-12-12 14:09:00 IST
14-ம் கட்ட தடுப்பூசி முகாம் 689 மையங்களில் நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 19.95 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 17.69 லட்சம் பேர் முதல் தவணை, 9.68 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கு முதல் தவணை, 5.16 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை செலுத்த வேண்டியிருந்தது.

இந்தநிலையில் 14-ம் கட்ட தடுப்பூசி முகாம் 689 மையங்களில் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் , பஸ் நிலையம்  உள்ளிட்ட இடங்களில்  தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

வழக்கம்போல் ஒரு லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒருநாள் மட்டும் 98 ஆயிரத்து 858 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.’ கடந்த முகாமில் 73 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இம்முறை கூடுதலாக 20 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது வரவேற்கத்தக்கது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News