உள்ளூர் செய்திகள்
சோழமாதேவி ஊராட்சியில் அங்கன்வாடி மையம்- அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
அமைச்சர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
மடத்துக்குளம்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சோழமாதேவி ஊராட்சியில் 2020-2021ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் முபெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேலும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அரசு அதிகாரிகள் , நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.