உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொடிக்கம்பங்களை அகற்ற அதிரடி உத்தரவு

Published On 2021-12-11 09:11 GMT   |   Update On 2021-12-11 09:11 GMT
மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்றவும், அதுகுறித்த அறிக்கையை வரும் 16-ந்தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கொடி கம்பங்கள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளதாகவும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

திருப்பூரை சேர்ந்த வக்கீல் கோபிநாத் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
 
அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிக்கம்பங்கள் அனைத்தையும் அகற்றவும், அதுகுறித்த அறிக்கையை வரும் 16-ந்தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு இதுகுறித்து ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. 

இதையடுத்து மாநகராட்சி பகுதியில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் வரும் 13-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் அகற்ற நடவடிக்கை எடுத்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News