செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா

Published On 2021-11-30 19:35 IST   |   Update On 2021-11-30 19:35:00 IST
தமிழகத்தில் தற்போது 8,244 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் மற்றும் பாலியானவர்கள்  எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக மேலும் 720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 8,244 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 27,26,917 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,82,192 பேர் குணமடைந்துள்ளனர். 36,481 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,00,048 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Similar News