செய்திகள்
கோப்புபடம்

நமக்கு நாமே திட்டம் - திருப்பூர் மாநகராட்சி அழைப்பு

Published On 2021-11-30 09:24 GMT   |   Update On 2021-11-30 09:24 GMT
கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நீர் நிலைகள் தூர்வாருதல், சாலை அமைத்தல், வடிகால்கள் தூர்வாருதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், பூங்கா அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகள் பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.
 
இதுதவிர, மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் ஆய்வகங்கள், சுற்றுச்சுவர், கழிப்பிடம், மதிய உணவுக்கூடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத் தலாம். நகரப்பகுதியில் நவீன நூலகங்கள், அறிவு சார் மையங்கள் ஏற்படுத்தலாம்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கழிப்பிடம் அமைத்தல், நீர்ப்பாசன நெறிமுறைகளுடன் மரம் நடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளலாம். இதுபோன்ற பணிகளில் தனிநபர்கள் அமைப்புகள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம். 

இதில் 33 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புடன் நிர்வாகம் பணிகள் மேற்கொள்ளும். இதில் ஆர்வம் உள்ளோர் உரிய பகுதி மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர்களை அணுகலாம் என மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News