செய்திகள்
சாதனை படைத்த மாணவருக்கு பாராட்டு தெரிவித்த காட்சி.

தடகள போட்டியில் இடுவம்பாளையம் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2021-11-28 06:09 GMT   |   Update On 2021-11-28 06:09 GMT
80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 10ம் வகுப்பு மாணவர் பரத் மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட இளையோர் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள்  நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்  இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம்வகுப்பு மாணவர் யுகேஷ் மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் 10ம் வகுப்பு மாணவர் பரத் மாவட்ட அளவில் இரண்டாவது பரிசு பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், உதவி தலைமையாசிரியர்கள் வனிதா சுகந்தினி, சுமதி, வசந்தகுமாரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பாராட்டினர்.
Tags:    

Similar News