செய்திகள்
கோப்புபடம்

விபத்துக்களை தடுக்க திருப்பூர்-மங்கலம் சாலையில் டிவைடர்-விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-11-28 06:02 GMT   |   Update On 2021-11-28 06:02 GMT
சின்னாண்டிபாளையம் பிரிவு, குளத்துப்புதூர், ஆண்டிபாளையம் பிரிவு போன்ற இடங்களில் பல சாலைகள் இணைகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் நகரத்தில்  இருந்து குமரன் கல்லூரி, ஆண்டிபாளையம்  பிரிவு,  குளத்துப்புதூர்,  சின்னாண்டிபாளையம் பிரிவு, சுல்தான்பேட்டை, மங்கலம்  வரை உள்ள நெடுஞ்சாலை துறை சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான  வாகனங்கள்  சென்றுவருகின்றன.

இதில் சின்னாண்டிபாளையம் பிரிவு , குளத்துப்புதூர், ஆண்டிபாளையம் பிரிவு போன்ற இடங்களில் பல சாலைகள் இணைகின்றன. ஏராளமான வாகனங்கள் அந்த வழியாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து அதிகமாகி விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.

இதனால் குமரன் கல்லூரி அருகில் இருந்து மங்கலம் வரை நெடுஞ்சாலைத்துறை சாலையில் டிவைடர் அமைத்து போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டுமென மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும்   பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News