செய்திகள்
மரம்

சென்னையில் 46 இடங்களில் மரங்கள் விழுந்தன- உடனடியாக அகற்றம்

Published On 2021-11-27 09:47 GMT   |   Update On 2021-11-27 09:47 GMT
மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.
சென்னை:

சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் ஒரு சில பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. காற்றுடன் மழை பெய்வதால் மரங்களும் விழுந்தன.

கடந்த 25-ந் தேதி முதல் இன்று காலை வரை 46 இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தன. இது பற்றி பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினார்கள்.

33 இடங்களில் விழுந்த மரங்கள் நேற்றுடன் அகற்றப்பட்டு விட்டன. 13 இடங்களில் இன்று காலையில் மரங்களை அகற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மரங்களை உடனுக்குடன் அகற்றி வருகிறார்கள்.


Tags:    

Similar News