செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் தண்ணீர் தேங்கிய 75 பகுதிகளில் இருந்து வெறியேற்றும் பணி தீவிரம்- மாநகராட்சி நடவடிக்கை

Published On 2021-11-27 06:27 GMT   |   Update On 2021-11-27 06:27 GMT
மழைநீர் சூழ்ந்துள்ள 75 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

சென்னை:

சென்னையில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் போர்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மழைநீர் தேங்க கூடிய பகுதிகளில் தண்ணீர் வெளியேற்ற 850 இடங்களில் மின் மோட்டார் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதனை இயக்குவதற்கும் ஊழியர்கள் உஷாராக உள்ளனர். எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை ஊழியர்கள் கண்காணித்து வெளியேற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

தி.நகர், வளசரவாக்கம், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, கிண்டி சர்தார்வல்லபாய் படேல் சாலை, பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.

கடந்த காலங்களில் வெள்ளம் சூழாத இடங்களில் கூட இந்த ஆண்டு மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி செல்வதால் தண்ணீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.



சென்னையில் அதிகம் பாதிப்பு உள்ள 75 பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இரவு பகலாக வெளியேற்றப்படுகிறது.

அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக உள்ளது.

ஆனாலும் பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மழைநீர் சூழ்ந்துள்ள 75 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... செம்மரம் கடத்தல்- ஆந்திர வனத்துறை விரட்டிய போது லாரியில் இருந்து குதித்த தமிழக வாலிபர் பலி

Tags:    

Similar News