செய்திகள்
கோப்புபடம்

பல்லடத்தில் பள்ளிக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு

Published On 2021-11-26 09:24 GMT   |   Update On 2021-11-26 09:24 GMT
தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் புதரில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
பல்லடம்:

பல்லடம் மங்கலம் ரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சில நேரங்களில் பாம்பு, பல்லி போன்றவை வந்து விடுகின்றன. 

இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்துள்ளனர். இதையடுத்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் புதரில் இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். 

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், தொடர் மழை பெய்ததால் பள்ளி வளாகத்தில் அதிகமாக புற்கள் முளைத்துள்ளது .மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சுவர் இருந்தால் இது போன்ற விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் வராது என்றனர். 
Tags:    

Similar News