செய்திகள்
பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

செல்பி மோகத்தில் பாம்பாறு தடுப்பணை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2021-11-21 05:56 GMT   |   Update On 2021-11-21 05:56 GMT
செல்பி மோகத்தில் கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணிபுதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. விவசாயி. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). நாமக்கல் தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வருகிறார்.

இவர் தனது உறவினர்கள் பரமசிவம் (45), ஆறுமுகம் (37) ஆகியோருடன் சேர்ந்து நேற்று மாலை கதவணிபுதூர் அருகே உள்ள பாம்பாறு தடுப்பணைக்கு சென்றார்.

அங்கு ஆறுமுகமும், பரமசிவமும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, விக்னேஷ் ஆற்றில் இறங்கி செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி ஆற்றில் விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகமும், பரமசிவமும் விக்னேசை மீட்க முயன்றனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் விக்னேசை காப்பாற்ற முடியவில்லை. ஆற்றி வெள்ளத்தில் விக்னேஷ் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிராம மக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் இரவு நேரமானதால் விக்னேசை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து இன்றும் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது.

Tags:    

Similar News