செய்திகள்
பூண்டி ஏரி

தொடர் மழை எதிரொலி - பூண்டி ஏரியில் இருந்து 37 ஆயிரம் கன அடி நீர்திறப்பு

Published On 2021-11-20 00:15 GMT   |   Update On 2021-11-20 00:15 GMT
பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் நிரம்பி வருகின்றன.

அந்தந்த நீர்த்தேக்கங்களில் இருந்து பெரும் அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்த உபரி நீர் செல்லும் இடங்களின் கரையில் இருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடி அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று மணலி புதுநகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Tags:    

Similar News