செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை அருகே ஆட்டோவுடன் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட முதியவர் பலி

Published On 2021-11-18 16:18 IST   |   Update On 2021-11-18 16:18:00 IST
அணிக்கடவு- வாகன தொழுவு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணிக்கடவு- வாகன தொழுவு இடையே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி  வெள்ளம் சென்றது. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார் அவரது தந்தை சின்னச்சாமியுடன் தரைப்பாலத்தை ஆட்டோவில் கடந்து செல்ல முயன்றார். 

அப்போது ஆட்டோவை வெள்ளம் இழுத்து சென்றது. இதில் செல்வகுமார் அங்குள்ள மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார். சின்னசாமியை வெள்ளம் இழுத்து சென்றது. அவரது நிலைமை என்ன ஆனது என தெரியவில்லை. 

அவரை தேடும் பணியில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 

இந்தநிலையில் இன்று காலை சின்னச்சாமி பிணமாக மீட்கப்பட்டார். 
Tags:    

Similar News