செய்திகள்
பள்ளி மாணவிகள்

கனமழை எதிரொலி: 26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-18 02:54 GMT   |   Update On 2022-06-14 05:04 GMT
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதி இடையே நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ.க்கும் மேல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதைத்தவிர வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்  ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், திண்டுக்கல், தேனி, தருமபுரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்  இன்று பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் இன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படியுங்கள்.. சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது
Tags:    

Similar News