செய்திகள்
6 இடங்களில் சோதனை- தமிழ்நாட்டிலும் ஆபாச படம் அனுப்பிய கும்பல் சிக்கியது
கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையம் பெட்டதாபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக நாடு முழுவதும் சோதனை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் தமிழ்நாட்டிலும் 6 இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கோவை, திண்டுக்கல் ஆகிய 6 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் பலர் சிக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யார், யார்? என்பது குறித்து சில விவரங்கள் கிடைத்துள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற இடத்தில் சோதனை நடந்தது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக உள்ள தங்கராஜா என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினார்கள். இவருக்கு 2 மகன்கள். அதில் ஒரு மகன் டெல்லியில் படித்து வந்தார்.
தங்கராஜா அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்து இருந்தார். அந்த போனில் இருந்துதான் குழந்தைகள் ஆபாச படங்கள் பகிரப்பட்டு இருந்தன.
இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் தங்கராஜா மற்றும் அவருடைய மகனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவர் ‘‘நான் பயன்படுத்திய செல்போன் ஏற்கனவே தொலைந்துவிட்டது. அதில் சிம்கார்டுகள் இருந்தன. அதை எடுத்த யாரோ அந்த போனை பயன்படுத்தி இவ்வாறு செய்து இருக்கிறார்கள். எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று கூறினார்.
ஆனாலும் அவர் சொல்வது உண்மைதானா என்பதை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் சொன்ன தகவல்களை தந்தை-மகன் இருவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் எழுதி வாங்கி இருக்கிறார்கள். சி.பி.ஐ. அதிகாரிகள் 11 மணி நேரம் அந்த வீட்டில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல சேலம் சன்னியாசிகுண்டில் உள்ள காட்டுமரங்குட்டையை சேர்ந்த தினேஷ் (வயது 25) என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தினேஷ் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தபோது அவர் அங்கு இல்லை. எனவே குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி எடுத்து சென்றார்கள். வீட்டில் 6 மணிநேரம் விசாரணை நடந்தது. தினேஷ் இங்கு வந்ததும் தகவல் தெரிவிக்கும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
தினேஷ் தனது செல்போனில் இருந்து இளம்பெண் ஒருவருக்கு ஆபாச தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் கோவை அருகே உள்ள பெரிய நாயக்கன்பாளையம் பெட்டதாபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து இருக்கிறார்கள். அவரை பற்றிய முழுவிவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
திருவண்ணாமலையிலும் சி.பி.ஐ. போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கார்த்திகை திருவிழா நடைபெறுவதால் வேறு ஒருநாளில் வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
மற்ற இடங்களில் யார், யாரிடம் சோதனை நடந்தது? என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.