செய்திகள்
ஜம்புக்கல் மலை பகுதியில் வக்கீல்கள் குழு ஆய்வு செய்ததை படத்தில் காணலாம்.

உடுமலை ஜம்புக்கல் மலை பகுதியில் வக்கீல்கள் குழுவினர் ஆய்வு

Published On 2021-11-15 06:21 GMT   |   Update On 2021-11-15 10:14 GMT
பசுமையாக இருந்த மலையை அழித்து பாறைகளை உடைத்தது, மரங்கள் வெட்டி தீ வைக்கப்பட்டு, ரோடு, கிணறு, போர்வெல், வீடு, கம்பி வேலி, கேட் அமைத்தது குறித்து ஆய்வு செய்தனர்.
உடுமலை;

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜம்புக்கல் அழிப்பு குறித்து அமராவதி நகரில் நடந்த மாவட்ட சட்ட பணிகள் குழு விழிப்புணர்வு முகாமில் விவசாயிகள் மனு அளித்தனர். 

இதையடுத்து மாவட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சுவர்ணம் நடராஜன் மற்றும் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பிரஸ்ஜனவ் ஆகியோர் சிறப்பு வக்கீல் குழுவை அமைத்து மலைப்பகுதியை ஆய்வு செய்தும், விசாரணை நடத்தியும் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சட்ட பணிகள் குழு வக்கீல்கள் ஜெகதீஷ், பிரகாஷ், அலுவலர்கள் ஆறுமுகம், பூங்கோதை மற்றும் வருவாய்த்துறை, போலீசார், வனத்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். பசுமையாக இருந்த மலையை அழித்து பாறைகளை உடைத்தது, மரங்கள் வெட்டி தீ வைக்கப்பட்டு, ரோடு, கிணறு, போர்வெல், வீடு, கம்பி வேலி, கேட் அமைத்தது குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது அரசுக்குச்சொந்தமான 1,000 ஏக்கர் நிலம், கனிம வளம் அழிப்பு, ஓடைகள் திசை மாற்றம், பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விவசாயிகள் விளக்கினர்.
Tags:    

Similar News