செய்திகள்
கோப்புபடம்

வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர்-விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-11-14 12:49 IST   |   Update On 2021-11-14 12:49:00 IST
உத்தமபாளையம் அணை கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றன. போதிய நீராதாரம் இல்லாததால் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர்  நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அணை பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் கே.பழனிசாமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:-

உத்தமபாளையம் அணை கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகின்றன.போதிய நீராதாரம் இல்லாததால் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே பாசனத்துக்காக அணை திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு அருகில் இருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர்கொண்டு வந்து நிரப்பும் திட்டம் உள்ளது.

இப்பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்கால் பாசனம் தொடங்கும்போதோ அல்லது முடிவுற்ற பின்னரோ பரம்பிக்குளம் - ஆழியாறு அணையில் வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

தற்போது பரம்பிக்குளம் -ஆழியாறு அணையில் போதிய நீர்இருப்பு இருப்பதால் அதிகாரிகள் எங்களுக்கு தண்ணீர் வழங்க முன்வரவேண்டும். பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

விவசாயிகளும், இப்பகுதி மக்களும் வறட்சியால் தவித்து வருகிறோம். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News