நம்பியூர் அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ராமநாதபுரம் என்ற பகுதியில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் அருகே சென்ற போது ஒரு பிக்கப் வேனில் சில நபர்கள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் என்ன மூட்டை ஏற்றுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் மூட்டைகளை பரிசோதித்து பார்த்தபோது ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் ரேசன் அரிசி கடத்திய வாகனம் மற்றும் 1½ ரேசன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.