செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு உணவு விநியோகம்

Published On 2021-11-11 07:32 GMT   |   Update On 2021-11-11 07:32 GMT
சென்னையில் 160-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை விடாமல் பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் உணவுகள் வழங்கப் பட்டு வருகிறது.

இதற்காக 160-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் சென்னையில் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்களுக்கு உணவுகள் வழங்குவது மட்டுமின்றி தண்ணீரில் தவிக்கும் மக்களை நேரில் சந்தித்தும் உணவுகளை வழங்கி வருகிறார்கள்.

இன்று சென்னை மாநகராட்சி சார்பில் 2 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. பொங்கல், சாம்பார், கிச்சடி, ரவா உப்புமா விநியோகம் செய்யப்பட்டன.

இது தவிர அம்மா உணவகங்களிலும் 3 வேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மழை நீர் வடியும் வரை பொதுமக்களுக்கு இங்கு இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
Tags:    

Similar News