செய்திகள்
மண்ணில் புதைந்த கட்டிடம்.

திருப்பூரில் மண்ணில் புதைந்த கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றம்-வல்லுனர் குழுவினர் ஆய்வு

Published On 2021-11-05 08:32 GMT   |   Update On 2021-11-05 08:32 GMT
மண் பரிசோதனை வடிவமைப்பு செய்த நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தில் 29.37 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி நடந்து வருகிறது. மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் குளம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இப்பணி நடந்து வருகிறது.

இப்பகுதியில் 2 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில் கட்டுமானம் மற்றும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளோரினேசன் தொட்டி நிலமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த தொட்டி கட்டுமானம் 3 அடி ஆழத்துக்கு மண்ணில் புதைந்தது. 

நேற்று அந்த கட்டுமானம் முழுமையாக இடித்து முடிக்கப்பட்டு இடிபாடு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மண் பரிசோதனை வடிவமைப்பு செய்த நிறுவனங்களை சேர்ந்த வல்லுனர் குழுவினர் இன்று ஆய்வு நடத்த உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவும் ஆய்வு செய்ய உள்ளனர்.
Tags:    

Similar News