செய்திகள்
உடுமலையில் பஸ்கள் திடீர் நிறுத்தம்
இன்று காலை பள்ளி மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரச்சினை காரணமாக இன்று காலை பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை பள்ளி மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு பேருந்துகளை இயக்க தொடங்கினர். இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையத்திற்குள் பொதுமக்கள் பேருந்து வசதிகள் இல்லாமல் அவதியடைந்தனர்.