செய்திகள்
வைரமுத்து

பாட்ஷாபோல் நடந்து வா: ரஜினி நலம்பெற வைரமுத்து வாழ்த்து

Published On 2021-10-31 11:42 IST   |   Update On 2021-10-31 11:48:00 IST
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை கடந்த திங்கட்கிழமை டெல்லியில் சென்று பெற்றார். அதன்பின் மகள் செயலியை வெளியிட்டார். அதன்பின் அண்ணாத்த படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தார். படம் பார்த்த அடுத்த நாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்னும் சில நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும் கூறப்பட்டது.




இதுகுறித்து வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- 

காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம் திரு. ரஜினியின் நலம் கேட்டேன்.

நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள் என் நிம்மதியை மீட்டெடுத்தன.

உத்தமக் கலைஞனே

காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா

படையப்பா எழுந்து வா
பாட்ஷாபோல் நடந்து வா

வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

Similar News