செய்திகள்
சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் முகப்பு தோற்றம்

சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-10-17 09:22 GMT   |   Update On 2021-10-17 09:22 GMT
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு என தனி, தனியாக பள்ளி இயங்கி வருகிறது. இந்த இரு பள்ளிகளும் அருகருகே உள்ளன.

இந்த பள்ளிகளில் சத்திரப்பட்டி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவர்களும் வந்து கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகள், விளையாடுவதற்கு மைதானம் அமைக்கப்படவில்லை. தற்போது அரசு பள்ளியில் ஆங்கில மொழி கல்வியும் தொடங்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து ெகாண்ேட செல்கிறது.

விளையாட்டு பாடப்பிரிவுகள் நடத்த விளையாட்டு மைதானம் இல்லை. கிராமத்தில் இருந்து படிக்க வரும் மாணவ-மாணவிகள் விளையாட்டு திறமை அதிகம் உள்ளவர்கள் ஆவா. ஆனால் அவர்களின் திறமையை வெளிப்படுத்த முறையான பயிற்சி எடுக்க மைதானம் இல்லை.

பள்ளியின் எதிரே மைதானம் அமைக்க இடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரண்டு பள்ளிகளுக்கும் மைதானம் அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News