செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை, ஊத்தங்கரை பகுதிகளில் விவசாயி, தொழிலாளி தற்கொலை

Published On 2021-09-29 17:36 IST   |   Update On 2021-09-29 17:36:00 IST
ராயக்கோட்டை, ஊத்தங்கரை பகுதிகளில் விவசாயி, தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கனம்பட்டியை சேர்ந்தவர் சிவன் (வயது 30). விவசாயி. இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், மகள் உள்ளனர். சிவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சிவன், விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவன் இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊத்தங்கரை அருகே உள்ள எலச்சூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் குடும்ப தகராறு காரணமாக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சங்கர் மீது ஊத்தங்கரை, மத்தூர் போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News