செய்திகள்
பலி

தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2021-09-23 12:42 IST   |   Update On 2021-09-23 12:42:00 IST
தாளவாடி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியானதையடுத்து மின்வேலி அமைத்த மனோகரனை போலீசார் தேடி வருகின்றனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரையன் (52). மரம் ஏறும் தொழிலாளி. இவர் தாளாவாடி அடுத்த தொட்டகாஜனூர் என்ற பகுதியில் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் துரையன் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது தோட்டத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் ஏற முயன்றார். அப்போது தோட்டத்தைச் சுற்றி அமைத்து இருந்த மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு துரையன் இறந்து விட்டார்.

இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தோட்டத்துக்கு போட்டிருந்த மின்வேலியில் சிக்கி துரையன் இறந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்வேலி அமைத்த மனோகரனை தேடி வருகின்றனர்.

Similar News