செய்திகள்
மழை

மாவட்டம் முழுவதும் மழை- அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் பதிவு

Published On 2021-09-21 10:08 GMT   |   Update On 2021-09-21 10:08 GMT
போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தண்டராம்பட்டு-52, கலசபாக்கம்-45, வந்தவாசி-37, போளூர்-31.8, ஜமுனாமரத்தூர்-22, செய்யாறு-18, திருவண்ணாமலை-6, ஆரணி-4.5, சேத்துப்பட்டு-3.4, கீழ்பென்னாத்தூர்-2.8 ஆகும்.

மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சாத்தனூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 208 கன அடி தண்ணீரும், மிருகண்டாநதிக்கு விநாடிக்கு 48 கன அடி தண்ணீரும் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் இருந்து போளூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நேற்று அதிகாலை முதல் வேகமாக வருகிறது.
Tags:    

Similar News