செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் 6½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-21 03:58 GMT   |   Update On 2021-09-21 03:58 GMT
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல் டோஸ் போல் 2-வது டோசும் 100 சதவீதம் செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 3 ஆயிரத்து 963 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது.

நீலகிரியில் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி நிபா வைரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News