செய்திகள்
ஹெல்மெட்

போலீசாரும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்

Published On 2021-09-18 17:09 IST   |   Update On 2021-09-18 21:35:00 IST
சட்டவிதிகளை செயல்படுத்துவதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஒரே முறைதான் கடைப்பிடிக்கப்படும்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியதாவது:-

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் பொழுது உயிர்பலி ஏற்படுவது தவிர்க்கப்படும். இதனால் அனைவரும் தவறாமல் ஹெல்மெட் அணிய வேண்டும். முக்கியமாக போலீசார் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீது போக்குவரத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் அபராதம் விதிப்பார்கள். சட்டவிதிகளை செயல்படுத்துவதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஒரே முறைதான் கடைப்பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News