செய்திகள்
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன்

கூட்டணி கட்சிகளுடன் சுமூக முடிவு காண வேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்

Published On 2021-09-15 10:49 IST   |   Update On 2021-09-15 11:50:00 IST
உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க தி.மு.க.வினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டும் என மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News