செய்திகள்
அபராதம்

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

Published On 2021-09-08 18:00 GMT   |   Update On 2021-09-08 18:00 GMT
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் உள்பட 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் தவிர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த சோதனை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.26 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற காலங்களில் தடைசெய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News