செய்திகள்
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் ஊழியர் பலி
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு கிராமம் ராஜாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 48). இவர் நெய்விளக்கு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடித்து தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது குரவப்புலத்தில் ஒரு பள்ளி அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மூவேந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூவேந்தன் இறந்து விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.