செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் மேலும் 71 பேருக்கு கொரோனா

Published On 2021-08-26 03:09 IST   |   Update On 2021-08-26 03:09:00 IST
புதுச்சேரியில் நேற்று 76 பேர் குணடைந்துள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 71 பேருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 163 பேர், வீடுகளில் 597 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 76 பேர் குணடைந்துள்ளனர். அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.

Similar News