செய்திகள்
நாகை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்
நாகை, நாகூர், வேதாரண்யம், திருக்குவளை, கருப்பம்புலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முட்டம் மேல்நிலைப்பள்ளி, அந்தணப்பேட்டை தொடக்கப்பள்ளி, கொடியாளத்தூர் பள்ளி, ஆந்தகுடி பள்ளி, தேவூர் ஆரம்ப சுகாதார நிலையம், வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையம், தாதன் திருவாசல், திருக்குவளை மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை கே.கே.நகர் காலனி அங்கன்வாடி, தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. நாலுவேதபதி, நீர்மூலை ஆரம்ப சுகாதார நிலையம், ஆதலையூர் எஸ்.எம்.டி.காலனி, கத்தரிப்புலம் பஞ்சாயத்து அலுவலகம், ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுதவிர நாகை, நாகூர், வேதாரண்யம், திருக்குவளை, கருப்பம்புலம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்பட உள்ளது.