செய்திகள்
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை இந்த கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு மற்றும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். உண்டியலில் பணம் மட்டும் திருட்டு போயிருந்தது. சில்லறை காசுகள் அப்படியே கிடந்தன. உண்டியலில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருக்கலாம் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.