செய்திகள்
போதை பொருட்கள் விற்பனை - மளிகை வியாபாரி உள்பட 3 பேர் கைது
இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் மளிகைக்கடையில் சோதனையிட்டபோது பான் மசாலா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யகூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி., சசாங் சாய் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஜெபராஜ் (வயது 45) என்பவர் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் மளிகைக்கடையில் சோதனையிட்டபோது பான் மசாலா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெபராஜை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவருக்கு அதனை சப்ளை செய்த கேத்தனூரை சேர்ந்த ஆறுச்சாமி (52), அருண்குமார் (30) ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,800 கிலோ பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.