செய்திகள்
தமிழக அரசு

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி - தமிழக அரசு ஆலோசனை

Published On 2021-08-16 04:18 GMT   |   Update On 2021-08-16 07:29 GMT
பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை:

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசுப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்த திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.800 கோடி வரை செலவிடுகிறது.

தற்போது பள்ளிகள் மூடியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அரசின் சார்பில் அரிசி உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குடும்ப பொருளாதார சூழலால் மாணவர்களின் இடை நிற்றலும் அதிகரித்துள்ளது.

இதை தவிர்க்க சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


‘‘பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பள்ளிகளில் இடைநிற்றல் கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

இதுபற்றி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்.’’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி: முதல் பெண் ஓதுவார் பேட்டி 

Tags:    

Similar News