செய்திகள்
யானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்தபடி நின்ற ஒற்றை யானை

Published On 2021-07-27 13:09 GMT   |   Update On 2021-07-27 13:10 GMT
சாலையில் யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். அதேபோல் ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது. யானை சாலையில் நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்த வாகனத்தை நிறுத்தினர்.

வாகனங்களை கண்ட ஒற்றை யானை வாகனங்களின் நோக்கி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மெதுவாக வனப் பகுதிக்குள் சென்றது.

இதைத்தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. சாலையில் யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News