செய்திகள்
அபராதம்

பந்தலூர் அருகே இ-பதிவு இன்றி வந்த காருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2021-07-14 09:27 GMT   |   Update On 2021-07-14 09:27 GMT
கொளப்பள்ளி பகுதியில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.ஆயிரம் விதிக்கப்பட்டது.
பந்தலூர்:

நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கு இ-பதிவு முறையில் அனுமதி பெற வேண்டும். இதனை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த கலெக்டர் இன்னசென்ட் உத்தரவிட்டார்.

இதன்படி பந்தலூர் அருகே தாளூர் சோதனைச்சாவடியில், கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன் மேற்பார்வையில், பந்தலூர் துணை தாசில்தார் சதீஸ் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து இ-பதிவு பெறாமல் வந்த காருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல கொளப்பள்ளி பகுதியில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.ஆயிரம் விதிக்கப்பட்டது.

நெலாக்கோட்டை பகுதியில் பந்தலூர் தாசிர்தார் தினேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் 11 வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி சென்றவருக்கு ரூ.5 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News