செய்திகள்
கோப்புபடம்

வில்லியனூர் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்

Published On 2021-07-07 17:07 IST   |   Update On 2021-07-07 17:07:00 IST
வில்லியனூர் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:-

வில்லியனூர் அருகே அரியூர் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி. இவர் அங்குள்ள தேசிய வங்கி எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் செல்வி (வயது23). இவர் கேட்டரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை செல்வி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தனது தாய் லட்சுமியிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு செல்வி வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் எங்கும் செல்வி இல்லை.

இதையடுத்து சின்னதம்பி தனது மகள் செல்வி மாயமானது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியை தேடி வருகிறார்கள். 

Similar News