செய்திகள்
கோப்புபடம்

புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-07-07 16:12 IST   |   Update On 2021-07-07 16:12:00 IST
ஒட்டு மொத்தமாக புதுவை மாநிலம் முழுவதும் தற்போது 1,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் இதுவரை 1,18,416 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று 6,756 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 129 பேருக்கும் காரைக்காலில் 33 பேருக்கும் ஏனாமில் 4 பேருக்கும். மாகியில் 23 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 225 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

புதுவை கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருமார்த்தபுரத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது பெண் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்கால், மாகி, ஏனாமில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 95 பேரும், கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 57 பேரும் கோவிட் கேர் சென்டர்களில் 11 பேர் என 242 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 1,511 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

ஒட்டு மொத்தமாக புதுவை மாநிலம் முழுவதும் தற்போது 1,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் இதுவரை 1,18,416 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,14,898 பேர் குணமடைந்துள்ளனர்

இத்தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Similar News