செய்திகள்
நாகூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் மற்றும் போலீ்சார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
நாகூர்:
நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் மற்றும் போலீ்சார் மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த ராஜகோபால் மகன் தென்னரசன் (வயது 22) மற்றும் 17 வயதான சிறுவன் என்பதும் இவர்கள் மோட்டார் சைக்கிளில் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்னரசன் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.