செய்திகள்
வேதாரண்யத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் வேதாரண்யம் அரசு மருத்துவமனை, கரியாப்பட்டினம், நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர். இந்த முகாமில் 2 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலர் தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர்.தோப்புத்துறையில் சுகாதாரத்துறையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.