செய்திகள்
பெட்ரோல்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை

Published On 2021-06-25 08:14 GMT   |   Update On 2021-06-25 08:14 GMT
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகை:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெட்ரோல் விலையேற்றத்தால் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களை கடுமையாக பாதிப்புக்கு ஆளாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News